ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத்
திருவிழா. கொல்லவருசம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில் 10 நாட்கள்
ஓணமாக கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி இது
கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாக கிபி 861
தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபலி என்ற கேரள மன்னன்
வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண்
கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும்
அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி. அவனுக்கு
முக்தி அளிக்க வேண்டி அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் மக்கள் மீது
மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது
நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு
திருவோணம் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது
வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்.
வடிவவியலில் எந்தவொரு முக்கோணத்துக்கும் ஒன்பது-புள்ளி வட்டம் வரைய
முடியும். முக்கோணத்தின் ஒன்பது முக்கியமான புள்ளிகளின் வழியே செல்வதால் இந்த வட்டம்
ஒன்பது-புள்ளி வட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முக்கோணத்தின் மூன்று பக்கங்களின்
நடுப்புள்ளிகள், மூன்று குத்துக்கோடுகளின் அடிகள், ஒவ்வொரு உச்சியையும் அதன் செங்குத்து
மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகியன இந்தப் புள்ளிகளாகும். ஒரு
முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது, அம்முக்கோணத்தின் மூன்று வெளிவட்டங்களை
வெளிப்புறமாகவும் உள்வட்டத்தை உட்புறமாகவும் தொடும் எனவும் 1822 -ல் கார்ல் ஃபோயர்பாக்
கண்டு பிடித்தார். இக்கண்டுபிடிப்பு ஃபோயர்பாக் தேற்றம் என அழைக்கப்படுகிறது. ஒரு
முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரமானது, அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின்
ஆரத்தைப்போல் இருமடங்காகும்.
விக்கிப்பீடியாவிற்கு வருக,
யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.
வின்சென்ட் வான் கோ ஒரு புகழ் பெற்ற டச்சு ஓவியர். பின்-உணர்வுப்பதிவுவாத பாணியிலான
இவரது ஓவியங்கள் இவர் உயிருடன் இருந்த காலத்தில் புகழ்பெறவில்லை. இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட ஓவியங்களை படைத்த வான் கோ, தனது வாழ்நாளின் பெரும்பகுதி வறுமையில்
உழன்றார். மனநிலை பாதிக்கப்பட்டு தனது 37வது வயதில் தற்கொலை செய்து
கொண்டார். பிரகாசமான நிறங்களும் ஆழ்ந்த உணர்வுத் தாக்கமும் கொண்ட இவரது ஓவியங்கள் 20ம்
நூற்றாண்டு ஓவியக் கலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று உலகில் அதிக
விலைக்கு விற்கப்படுகின்றன. இடப்புறம் உள்ள படம் வான் கோ தன்னைத் தானே வரைந்த
ஓவியங்களுள் ஒன்று.
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம்
மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது: 
